நீலகிரியில் வலம் வரும் நீல புலிகள் | Butterflies | Nilgiris
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பகுதியில் தேயிலை தோட்டங்கள், புல்வெளிகள், அடர்த்தியான வனம், அதனை ஒட்டி கிராமங்கள் என பசுமை சூழல் அமைந்துள்ளது. இந்த பகுதியில், தற்போது பருவமழை துவங்கி உள்ளதால், பல்வேறு வகையான வனவிலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெயர்ந்து வரத் துவங்கி உள்ளது. இதில் பார்வையாளர்களை கவரும் வகையில், வண்ணத்துப் பூச்சிகள் அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு பூச்செடியிலும் கொத்து, கொத்தாக நீலப்புலி வகை வண்ணத்துப்பூச்சிகள் உலா வருவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
ஜூலை 01, 2024