உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ட்ரோன் கேமரா மூலம் வனக்குழு கண்காணிப்பு | Nuisance wild elephants | Repellent kumkis | Pandalur

ட்ரோன் கேமரா மூலம் வனக்குழு கண்காணிப்பு | Nuisance wild elephants | Repellent kumkis | Pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகளை ஒட்டிய புதர் மற்றும் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதியில் ஓய்வெடுக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் கிராமங்கள் மற்றும் அதனை ஒட்டிய விவசாயத் தோட்டங்களில் புகுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. யானைகளுக்கு பயந்து கிராம மக்கள் இரவு 7 மணிக்கு மேல் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் புல்லட் மற்றும் கட்டை கொம்பன் என அழைக்கப்படும் இரண்டு யானைகளும் ஒன்றாக உலா வருகின்றன. ரேஷன் கடைகள், அங்கன்வாடிகள் மற்றும் வீடுகளின் கதவுகளை உடைத்து சமையல் பொருட்களை ருசித்து வருகின்றன. இதில் புல்லட் என்று அழைக்கப்படும் யானை மனிதர்களை பார்த்தால் புல்லட் எந்த வேகத்தில் வருமோ அதே வேகத்தில் துரத்தி வரும் குணம் கொண்டது. கடந்த 26 ம் தேதி இந்த இரண்டு யானைகளும் சப்பந்தோடு பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்து பாக்கு மரங்களை உடைத்தது. யானையை விரட்டுவதற்காக வீட்டை விட்டு வெளியே குஞ்சு முகமது என்ற வயதானவரை யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து நடந்த போராட்டத்தில் தொல்லை தரும் யானைகளை விரட்டுவதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்த கும்கி யானைகள் விஜய் மற்றும் வசீம் உதவியுடன் வனப்பதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளனர். கும்கி யானைகளுடன் வனச்சரகர் அய்யனார், வனவர்கள் ஆனந்த் மற்றும் முத்தமிழ் உள்ளிட்ட வனப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ட்ரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும் 30க்கும் மேற்பட்ட யானைகளை இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் விரட்டுவது இயலாத காரியம். இதையடுத்து கூடுதலாக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு குடியிருப்புகளை ஒட்டி முகாமிட்டுள்ள காட்டு யானைகளை துரத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ