ஊட்டி, கொடைக்கானல், வால்பாறைக்கு டூரிஸ்ட்டுகள் படையெடுப்பு | Ooty, Kodaikanal, Valparai
ஊட்டி, கொடைக்கானல், வால்பாறைக்கு டூரிஸ்ட்டுகள் படையெடுப்பு / Ooty, Kodaikanal, Valparai / Tourist Invasion காலாண்டு தேர்வு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை எனத் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, சிறுமலை உள்ளிட்ட மலைவாச ஸ்தலங்களுக்கு டூரிஸ்ட்டுகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கோவை மேட்டுப்பாளையம் டு ஊட்டிக்கு வரும் வாகனங்கள் குன்னூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோல் ஊட்டி டு மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டுமென போலீசார் அறிவித்துள்ளனர். குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் வாகனங்கள் ஆவின் பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் பார்க்கிங் செய்ய வேண்டும். கூடலூர் வழியாக ஊட்டிக்கு வரும் வாகனங்கள் எச்.பி.எஃப் பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் பார்க்கிங் செய்ய வேண்டும். கோத்தகிரியில் இருந்து வரும் வாகனங்கள் தொட்டபெட்டா பகுதியில் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் மாலை 9 மணி வரை ஊட்டி சிட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் சிட்டிக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அக்டோபர் 5ம் தேதி வரை அமலில் இருக்கும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. breath: கொடைக்கானல்: குளுகுளு ‛கொடை கும்கும் ஆஃப் சீசன் கொடைக்கானலில் ஆஃப் சீசன் களைகட்டி வருகிறது. இங்கு நிலவும் மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் டூரிஸ்ட்டுகள் உற்சாகமடைந்தனர். மோயர் பாய்ண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, பில்லர் ராக் , பசுமை பள்ளத்தாக்கு பிரையன்ட் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. பூங்கா, ரோஜா தோட்டம் ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களில் அதிக அளவில் டூரிஸ்ட்கள் குவிந்ததால் களைகட்டியது. வாகன போக்குவரத்து நெரிசல் அதிகளவு உள்ளது. breath: வால்பாறை: டூரிஸ்ட்டுகள் குதுாகலம் வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டுள்ளனர். இங்குள்ள ஆறுகளில் ஆனந்தமாக குளித்தும். வாகனங்கள் ரோட்டில் நிறுத்தி டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறை களைகட்டியது.