/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ டூரிஸ்ட்டுகள், வியாபாரிகள் கடும் பாதிப்பு | Ooty Botanical Garden Entry Fee Hike
டூரிஸ்ட்டுகள், வியாபாரிகள் கடும் பாதிப்பு | Ooty Botanical Garden Entry Fee Hike
தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ் தலங்களின் ஊட்டி முதலிடம் வகிக்கிறது. இங்கு ஆண்டு தோறும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது இ பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு கட்டணம் 50 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்காவில் ஆன்லைன் பேமென்ட், டாய்லெட் உள்ளிட்ட வசதிகள் இல்லை. நுழைவு கட்டண உயர்வால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செப் 21, 2024