வன விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி ஐகோர்ட் உத்தரவு
வன விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி ஐகோர்ட் உத்தரவு | Masinagudi Bandh |Mudumalai Tiger Reserve |Nilgiris News |Ooty Tourism |Masinagudi Jeep Safari ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அதிகளவில் செல்கின்றனர். அங்கிருந்து மசினகுடி, மாயார், சிங்காரம் உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு ஜீப் சவாரி மேற்கொண்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். வனச்சுற்றுலாவை நம்பி 500க்கும் மேற்பட்ட ஜீப் ஓட்டுநர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாத் தொழிலாளர்கள், கடை வியாபாரிகள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். வன விலங்குகள் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி கல்லட்டி மலைப்பாதையில் ஊட்டி செல்லும் சாலையை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசினகுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் கடைகளை அடைத்து முழு பந்த்தில் ஈடுபட்டனர். சுற்றுலா ஜீப்புகளும் ஓடவில்லை. சுற்றுலாவை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்தனர். மக்கள் வாழ்வாதாரம் கருதி இந்த உத்தரவை ஐகோர்ட் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.