3 பஸ்களில் 180 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர் | Strong wind |Ooty train cancellation
நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்கிறது. இதில் குன்னூர் ஊட்டி இடையே மலை ரயில் பாதையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாய்ந்தன. சில இடங்களில் ராட்சத மரங்கள் ரோடு மற்றும் தண்டவாளத்தில் சாய்ந்தன. இதனால் ஊட்டி குன்னூர் இடையே இன்று காலை 7.45 மணி மற்றும் காலை 9 மணிக்கு இயக்கப்பட வேண்டிய மலை ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு சுற்று ரயிலும் ரத்து செய்யப்பட்டது. மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் மேட்டுப்பாளையம் டு ஊட்டி நோக்கி வந்த மலை ரயில் குன்னூரில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இந்த ரயிலில் வந்த பயணிகள் 180 பயணிகள் குன்னூர் டு ஊட்டிக்கு 3 அரசு பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதும் மலை ரயில் இயக்கப்படும். மேட்டுப்பாளையம் டு குன்னூர் இடையே எந்த பாதிப்பும் இன்றி மலை ரயில் இயங்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.