உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வார இறுதி நாளில் 8,000 வாகனங்களுக்கு அனுமதி | High Court Order | Ooty

வார இறுதி நாளில் 8,000 வாகனங்களுக்கு அனுமதி | High Court Order | Ooty

வார இறுதி நாளில் 8,000 வாகனங்களுக்கு அனுமதி / High Court Order / Ooty நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு அதிக வாகனங்கள் வந்து செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட் ஊட்டிக்கு தினமும் எத்தனை வாகனங்கள் வந்து செல்கின்றன என்பதை கண்டறிய இ-பாஸ் நடைமுறைக்கு உத்தரவிட்டது. அதன்படி இ பாஸ் நடைமுறை பயன்பாட்டில் உள்ளது. ஊட்டியில் கோடை விழா துவங்குவதையொட்டி வாகன நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் தினமும் 6 ஆயிரம் வாகனங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் செல்ல ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, கூடலூரை ஒட்டிய தமிழக, கேரள மற்றும் கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகனங்களுக்கான இ-பாஸ் சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக - கேரள எல்லையான நாடுகாணி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இ-பாஸ் நடைமுறையை நீக்க வலியுறுத்தி நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த நீலகிரி வியாபாரி சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ