அரசு ஆரம்பப் பள்ளியில் களைகட்டிய இரண்டு நாள் விழா| School Function
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பல வயல் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இதன் 125 வது ஆண்டு விழா இரண்டு நாள் நிகழ்ச்சியாக நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில் விழா கொடி ஏற்றதலுடன் முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஊர்வலம் மற்றும் நுழைவாயில் திறப்பு விழா, நாணயம், அறிவியல், பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
ஜன 28, 2024