குன்னூரில் ஒரு டன் ஆரஞ்சு பழங்களில் ரெடி ஆகும் குளு குளு ஜூஸ் | orange juice | coonoor | juice var
குன்னுார் சிம்ஸ் பூங்கா அருகே தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பழவியல் நிலையத்தில் பழரசம், ஊறுகாய், ஜாம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இப்போதே வெயில் தாங்க முடியவில்லை. வருகிற நாட்களில் கோடையை சமாளிக்க பழ ஜூஸ் தயாரிப்பு பணி வேகமெடுத்துள்ளது. முதல் கட்டமாக ஒரு டன் ஆரஞ்சு பழங்களில் பழரசம் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. 700 மில்லி ஆரஞ்சு ஜூஸ் 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் திராட்சை, பைன் ஆப்பிள் ஜூஸ் 700 மில்லி 170 ரூபாய்க்கும் பேஷன் ப்ரூட் ஜூஸ் 180 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சிம்ஸ் பூங்கா, காட்டேரி, ரோஜா பூங்கா, ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட தோட்டக்கலைக்கு சொந்தமான இடங்களில் இந்த ஜூஸ் வகைகள் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.