/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது|Pandalur|Mahavishnu Temple Kumbabhishekam
பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது|Pandalur|Mahavishnu Temple Kumbabhishekam
நீலகிரி மாவட்டம் புத்தூர் வயல் மகாவிஷ்ணு கோயில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காலை 3:55 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகள் முடிந்து காலை 10:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்தனர் .
ஏப் 09, 2025