உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி | perfume exhibition in Gudalur

கூடலுாரில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி | perfume exhibition in Gudalur

கூடலுாரில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி / perfume exhibition in Gudalur நீலகிரி மாவட்டம் கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி மைதானத்தில் 1வது கோடை விழா மற்றும் வாசனப் பொருட்கள் கண்காட்சி துவங்கியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன், அரசு கொறாட ராமச்சந்திரன் துவக்கிதனர். கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் 77 கிலோ வாசனை பொருட்களை பயன்படுத்தி அமைக்கப்பட்ட குன்னூர் ரயில்வே ஸ்டேஷன் மாதிரி, வண்ணத்துப்பூச்சி செல்ஃபி பாயின்ட், இந்திய வரைபடம், ஜல்லிக்கட்டுக் காளை உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கண்காட்சியில் 51 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்களுக்கான ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம் பெரியவருக்கு 10 ரூபாய், சிறியவருக்கு 5 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இக்கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்.

மே 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை