உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வெற்றி பெற்றவர்களுக்கு பொங்கலன்று பரிசு | Nilgiris | Kolam Competition

வெற்றி பெற்றவர்களுக்கு பொங்கலன்று பரிசு | Nilgiris | Kolam Competition

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் விவேகானந்தர் இளைஞர் மன்றத்தின் 4 ம் ஆண்டு பொங்கல் விழா தொடங்கியது. பொங்கல் சிறப்பு கோலப்போட்டி புனித சேவியர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திரளான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பல்வேறு கோலங்கள் போட்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் விவேகா முதலிடத்தையும், ஸ்ரீநிதி 2 ம் இடம், வனஜா 3 ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பொங்கல் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். கோலப்போட்டி ஏற்பாடுகளை யோகேஸ்வரன், சாந்தி, வினோத்குமார், செல்வி உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்தனர்.

ஜன 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ