உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / இன்று முதல் நவம்பர் 25ம் தேதி வரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு|Post Monsoon Wildlife Survey| Muthumalai

இன்று முதல் நவம்பர் 25ம் தேதி வரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு|Post Monsoon Wildlife Survey| Muthumalai

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டு தோறும் பருவ மழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது. இந்தாண்டுக்கான பருவ மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்கியது. முதுமலை துணை இயக்குனர் வித்யா மேற்பார்வையில் வனச்சரகர்கள் சிவக்குமார், பாலாஜி, பாரத், கணேஷ் தலைமையில் வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது வனவிலங்குகளை நேரடியாக பார்ப்பது, அதன் எச்சம் மற்றும் கால் தடம் உள்ளிட்ட விபரங்களை மொபைல் போன் ஆப் மற்றும் டேட்டா சீட்டில் பதிவு செய்கின்றனர். வனத்துறையினர் கூறுகையில், முதுமலை வனப்பகுதி 37 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பருவமழைக்கும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு துவங்கி நடந்து வருகிறது. இதில் தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள் மற்றும் தாவரங்கள் குறித்து விபரங்களை கணக்கிடும் பணியில் வன ஊழியர்கள் மற்றும் வேட்டைத்தெடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் நவம்பர் 25ம் தேதி வரை நடைபெறும், என்றனர்.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை