ஆர்வத்துடன் பங்கேற்ற பழங்குடியின மாணவர்கள் | Nilgiris | Practicing scientific discovery
சென்னை கிறிஸ்தவ கல்லூரி வேதியியல் துறை மாணவர்கள் மூலம் கடந்த 2017 ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அம்பலமூலா பகுதி பழங்குடியின மாணவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் இடைநின்ற மாணவர்கள் பயிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் சேவை முகாமினை வேதியியல் துறை மாணவர்கள் நடத்தினார்கள். முகாமிற்கு முனைவர் விஜய் சாலமோன் தலைமை வகித்தார். பழங்குடியின மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், கணிதம், அறிவியல், உயிரியல் பாடங்களை பல்வேறு செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது. வண்ணங்களை உருவாக்கும் வழிமுறைகள், மற்றும் புவியீர்ப்பு விசையை எதிர்த்து ஓடும் சக்கரம், காந்தவிசை கோட்பாடுகளை பலூன் கொண்டு விளக்குதல், நியூட்டனின் மூன்றாம் விதியை விளையாட்டின் மூலம் புரிய வைத்தல், மாயாஜால கட்டம் மூலம் எளிதில் கூட்டல் மற்றும் கழித்தல் முறைகளை புரிய வைத்தல், திரவங்களின் அடர்த்தி மற்றும் அதன் பண்புகள் குறித்த பலன்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சார்ந்த செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டு செய்து காட்டியது மாணவர்களின் அறிவி திறமையை வெளிக்காட்டுவதாக இருந்தது. கல்லூரி முனைவர்கள் பிரபு, அமிர்தவல்லி, நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நலச் சங்க மேலாளர் ஜான், மாணவ ஒருங்கிணைப்பாளர் சந்திரன் உள்ளிட்ட பல பங்கேற்றனர்.