குன்னூர் ரயில்வே ஸ்டேஷனில் புடைப்பு சிற்பங்கள்
நீலகிரியின் வனவிலங்குகள் மற்றும் இயற்கையை வெளிப்படுத்தும் விதமாக புடைப்பு சிற்பங்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. கடந்த 1854ம் ஆண்டு மேட்டுப்பாளையம் டு குன்னூர் வரை பிரிட்டீஷாரால் மலை ரயில்ப்பாதை அமைக்கப்பட்டு 1899ம் தேதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இதில் நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் ரயில்வே ஸ்டேஷன் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 6 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பித்து பொலிவுபடுத்தும் பணிகள் 2023ல் இருந்து நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரியின் இயற்கை காட்சிகளை ஓவியங்களாக வரைந்து இயற்கை சூழலில் வன விலங்குகள், மலை ரயில் முக்கியத்துவத்தை பெருமை சேர்க்கும் வகையில் அமைத்து அதில் வண்ணங்களால் தீட்டப்பட்டு அழகாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவர தடுப்புச் சுவரில் முரல் ஆர்ட் எனப்படும் நீலகிரியின் முக்கியத்துவத்தை பெருமையை சேர்க்கும் வகையில் புடைப்பு சிற்பம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் பிளாட்பாரம், ரயில்வே அலுவலக சுவர்களில் மயில், யானை, காட்டெருமை, வரையாடு, புலி, கருஞ்சிறுத்தை, முள்ளம்பன்றி, சிறுத்தை, கரடி ஆகிய சிமென்ட் வடிவமைப்பு ஏற்படுத்தி அதில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. மரங்களில் இருவாச்சி பறவை, மலபார் ஸ்குரில் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. கோவை ஆர்ட் வெனசா, ஆர்ட் கேலரி சார்பில் ஈரோடு மாவட்டம் சம்பத் நகரை சேர்ந்த சிற்பக் கலைஞர் சரவணன், நாகமணி, நந்தகுமார் ஆகியோர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். #TravelIndia #NatureLovers #SouthIndia #CulturalHeritage #MountainRailways #ExploreTamilNadu #HistoricalPlaces #ScenicViews #TravelVlog #IncredibleIndia #ArtAndCulture