உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் குடியரசு தின விழா | Republic Day Celebration

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் குடியரசு தின விழா | Republic Day Celebration

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் குடியரசு தின விழா | Republic Day Celebration | Mudumala Tiger Reserve நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆண்டு தோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு குடியரசு தின விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. முகாம் வளாகத்தில் வளர்ப்பு யானைகள் வரிசையாக அணி வகுத்து நிற்க அதன் மீது பாகன்கள் தேசிய கொடியை ஏந்தி அமர்ந்திருந்தனர். யானைகளின் முன் வன ஊழியர்கள் அணிவகுத்து நின்றனர். நிகழ்ச்சியில் முதுமலை துணை இயக்குனர் வித்யா தேசியக்கொடி ஏற்றினார். அப்போது வன ஊழியர்கள் மரியாதை செலுத்த, வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. விழாவை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

ஜன 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை