சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு தடபுடல் வரவேற்பு| State level Karate | Sports | coonoor
சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு தடபுடல் வரவேற்பு| State level Karate | Sports | coonoor கடந்த வாரம் சென்னையில் மாநில அளவிலான ஆலன் திலக் கராத்தே போட்டி நடைபெற்றது . போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போட்டியில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 12 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கட்டாக் மற்றும் குமுத்தே பிரிவில் ஜனார்த், குழுத்தே பிரிவில் தர்ஷித் சுதீப், நிலாக்ஷா, ஷான்வி, ஜெய் தர்ஷினி ஆகியோர் தங்கம் வென்றனர். கட்டா பிரிவில் தேஜஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார். கட்டா பிரிவில் ஜோஸ்மிதா, விஷ்ணு, ஜோஷிதா, நட்சத்திராஸ்ரீ, ஹேமந்த் ஆகியோர் வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மூத்த பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் கவுரவ உரையாற்றினார். நீலகிரி மாவட்ட கராத்தே சங்க செயலாளர் ஜோசப் பாக்கிய செல்வம், துணைத்தலைவர் ஜான், பயிற்சியாளர்கள் நித்யா, ஹரிபிரியா மற்றும் வெஸ்லி ஆலய செயலாளர் பிரபாகர், பொருளாளர் சாலமன் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.