உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கோடை குளுகுளு சீசனுக்கு தயாராகும் ஊட்டி | summer festival | ooty tour | special train ready

கோடை குளுகுளு சீசனுக்கு தயாராகும் ஊட்டி | summer festival | ooty tour | special train ready

கோடை குளுகுளு சீசனுக்கு தயாராகும் ஊட்டி / summer festival / ooty tour / special train ready நீலகிரி மாவட்டம் குன்னூர் - ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கோடை விடுமுறைக்காக வரும் 28ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் 28ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 9:10 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயில் ஊட்டிக்கு பிற்பகல் 2:25க்கு வந்து சேரும். வரும் 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை சனி மற்றும் திங்கள் கிழமைகளில் ஊட்டியில் இருந்து காலை 11:25 மணிக்கு புறப்பட்டு மாலை 4:20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும் இந்த ரயிலில் மேட்டுப்பாளையம் முதல் குன்னுார் வரை முதல் வகுப்பு 40 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பு 140 இருக்கைகளும் உள்ளன. இதில், குன்னூரில் இருந்து ஊட்டி வரை கூடுதல் 40 இருக்கைகளுடன் ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது. முன்பதிவும் செய்து விடுமுறையை சுற்றுலா பயணிகள் கொண்டாட தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ