உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / 10% போனஸ் வாங்க முடியாது என தொழிலாளர்கள் திட்டவட்ட அறிவிப்பு | Tantea Labours strike | Nilgiri

10% போனஸ் வாங்க முடியாது என தொழிலாளர்கள் திட்டவட்ட அறிவிப்பு | Tantea Labours strike | Nilgiri

நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர், கோத்தகிரி, கோவை வால்பாறை பகுதிகளில் அரசு தேயிலை தோட்ட நிறுவனமான டான்டீ நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்த நிறுவனங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்பட்டது. டான் டீ நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்குவதால், இந்தாண்டு போனஸ் 10 சதவீதம் தான் வழங்க முடியும் என நிர்வாகம் கறார் காட்டியது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் டான் டீ தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் தான் போனஸ் வழங்க முடியும் என்பதை ஏற்க இயலாது எனக்கூறி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். போனஸ் தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீபாவளிக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் போனஸ் கிடைக்காததால், அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் இரண்டாவது நாளான இன்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். பாண்டியர் டான்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை