உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | temple kumbabhishekam | masinakudi

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | temple kumbabhishekam | masinakudi

நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடியில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 15ம் தேதி யாக வேள்விகளுடன் துவங்கியது. இதையொட்டி தீர்த்த மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், கலசங்கள் கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்டு காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை