தோடர் அல்லாதோர் தோடர் அடைகள் தயாரிக்கக் கூடாது என எஸ்பியிடம் புகார்
தோடர் அல்லாதோர் தோடர் அடைகள் தயாரிக்கக் கூடாது என எஸ்பியிடம் புகார் / Thodar Traditional Clothes Issue / Police SP Investication / Ooty / Nilgiris மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், குறும்பர், இருளர், காட்டு நாயக்கர், பனியர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களுக்க்கென தனி கலாச்சாரம், பண்பாடு, மொழி, தொழில் ஆகியவற்றை பாரம்பரியமாக தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றனர். தோடர் பழங்குடியின ஆண்கள் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் பூத்துக்குளி எனப்படும் எம்ராய்டரி சால்வைகள் நெய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த எம்ராய்டரி சால்வைகள் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தோடர் பழங்குடியினர் பெண்களின் பாரம்பரிய தொழிலை ஊட்டியை சேர்ந்த தோடர் அல்லாத பெண் ஒருவர் தோடர் ஆடைகளை தயாரித்து வருகிறார். இந்த ஆடைகளை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்து வருகிறார். இதனால் தோடர் பழங்குடியினர் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு மற்றும் தோடர் மட்டுமே தயாரிக்கும் உரிமை பெற்று தயாரிக்கப்படும் தோடர் எம்ராய்டரி ஆடை தயாரிப்பு பணிகளை தோடர் அல்லாதோர் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் தோடர் மக்கள் புகார் அளித்தனர்.