குன்னுார் - மேட்டுப்பாளையம் ரோட்டில் ட்ராஃபிக் ஜாம் | Landslide | traffic jam | coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இரவு பகல் பாராமல் மரங்களை வெட்டி சாலையை சீர் செய்கின்றனர். எனினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மீண்டும் மீண்டும் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கிறது. இதற்கிடையே குன்னூர் பர்லியார் பகுதியில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டதுடன் சாலையின் ஒரு பகுதி சரிந்து கீழே விழுந்தது. அங்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் மூலம் மண்களை அகற்றி சரிந்து விழுந்த சாலையை சீர் செய்தனர். சாலையோரம் போலீசார் கற்களை வைத்து விபத்து நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.