உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / மாணவ, மாணவிகள் ஓட்டுப்போட்டு முதல்வர், அமைச்சர்களை தேர்வு செய்து அசத்தல்

மாணவ, மாணவிகள் ஓட்டுப்போட்டு முதல்வர், அமைச்சர்களை தேர்வு செய்து அசத்தல்

மாணவ, மாணவிகள் ஓட்டுப்போட்டு முதல்வர், அமைச்சர்களை தேர்வு செய்து அசத்தல் | Tribal govt school assembly election | Dewala | Nilgiris நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பழங்குடியினர் உள்ளிட்ட 300 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் நல்லொழுக்கம், கல்வி மேம்பாடு, சுகாதாரம், சுற்றுச்சூழல், உணவு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மாணவர்கள் மூலமே செயல்படுத்தும் வகையில் மாணவர் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 7 அமைச்சர்கள், செயலாளர்கள் பதவிக்கு தேர்தல் நடந்தது. மாணவ, மாணவிகள் ஓட்டுப்போட்டு பள்ளியின் மாணவ பிரதிநிதிகளை தேர்வு செய்தனர். முதல்வராக மாணவர் ஹேமந்த், துணை முதல்வராக அபிநயா மற்றும் கல்வி, நல்லொழுக்கம், சுற்றுச்சூழல், சுகாதாரம், உணவுத்துறை, நேர மேலாண்மை ஆகிய 7 துறைகளுக்கு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை செயலாளராக தலைமையாசிரியர் சமுத்திர பாண்டியன் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் அமைச்சர்களின் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அமைச்சரவைக்கு பதவியேற்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. ஆசிரியர் முருகன் வரவேற்றார். நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவர் பேசுகையில், பழங்குடி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மாணவர்களும் கல்வியில் மேம்பட்டால் மட்டுமே எதிர்கால சமுதாயம் வளமுள்ளதாக மாறுவதுடன், இந்தியாவை வல்லரசாக்கும் சமூகத்தை உருவாக்க இயலும் என்றார். கூடலூர் அரசு கல்லூரி பேராசிரியர் மகேஸ்வரன் பதவியேற்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், செயலாளர்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு அமைச்சருக்கும் 10 பேர் கொண்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் அனைவருக்கும் நேம் பேட்ஜ் வழங்கப்பட்டது. அமைச்சரவைக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  தொடர்ந்து அமைச்சரவை பள்ளி அலுவலகத்தில் அமர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் தலைமை ஆசிரியர் இருக்கை முதல்வர் இருக்கையாக மாற்றி அமர வைக்கப்பட்டார். நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் நாகராஜ், பி.டி.ஏ.தலைவர் சி

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ