உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கொட்டும் மழையில் களைகட்டிய பாரம்பரிய கலாச்சார திருவிழா | Tribal people Harvest festival| Pandalur

கொட்டும் மழையில் களைகட்டிய பாரம்பரிய கலாச்சார திருவிழா | Tribal people Harvest festival| Pandalur

பூ புத்தரி திருவிழா பழங்குடிகளின் பாரம்பரியம் அது! Title:கொட்டும் மழையில் களைகட்டிய பாரம்பரிய கலாச்சார திருவிழா | Tribal people Harvest festival| Pandalur breath: பழங்குடியினரின் பாரம்பரிய பூ புத்தரி திருவிழா பொன்னானி மகாவிஷ்ணு கோயிலில் பாரம்பரிய திருவிழா விவசாயம் செழிக்க வேண்டி கடும் விரதம் இருக்கும் பழங்குடிகள் அறுவடைக்கு நன்றி சொல்லும் கலாச்சார பூ புத்தரி திருவிழா கொட்டும் மழையில் களைகட்டிய பாரம்பரிய திருவிழா ......... நீலகிரி மாவட்டம் பந்தலூர் பொன்னானி மகாவிஷ்ணு கோயிலில் பாரம்பரிய பூ புத்தரி விழா கோலாகலமாக நடைபெற்றது. பந்தலூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மலையாள மாதமான துலாம் மாதம் 1ம் தேதி முதல் 10 நாட்கள் விரதமிருப்பர். ஆண்டு தோறும் அறுவடைத் திருவிழாவாக இந்த பூ புத்தரி விழாவைக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விரதம் இருக்க உன்னிகிருஷ்ணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார் . 10 நாட்கள் கோயிலில் தங்கி விரதமிருந்து, அறுவடைக்கு நன்றி சொல்லும் பூஜையில் உன்னிகிருஷ்ணன் பங்கேற்றார். பூஜை செய்யப்பட்ட வேஷ்டி மற்றும் பிரசாதத்தை கோயில் நிர்வாகத்தினர் உன்னிகிருஷ்ணனுக்கு கொடுத்து மரியாதை செய்தனர். பழங்குடியினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் ஆலத்தூர் பகுதியில் உள்ள வயலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். வயலில் முதிர்ந்த நெற்கதிர்களை அறுவடை செய்தனர். நெல் கதிர்களை உன்னிக் கிருஷ்ணன் தலையில் சுமந்து வந்து கோயில் மேல் சாந்தி சுதீஷிடம் ஒப்படைத்தார் . பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள் அருகிலுள்ள கோயில் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்டது. கொட்டும் மழையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் பக்தர்கள் மற்றும் பழங்குடியினர் உற்சாகமாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் மற்றும் ஆதிவாசி சங்க நிர்வாகிகள் செய்தனர்.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ