நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமியிடம் ₹3.37 லட்சம் பறிமுதல்
நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமியிடம் ₹3.37 லட்சம் பறிமுதல் | Nilgiris | vigilance and anti corruption police Raid | ₹3.37 lakh seized நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சியில் ரோடு, கட்டப்பணிகள் என பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. பணிகள் பெற ஒப்பந்ததாரர்களிடம் நகராட்சி தலைவர் சிவகாமி 8 சதவீதம் கமிஷன் கேட்டார். பணிகளை பெற்ற ஒப்பந்ததாரர்கள் 11 பேர் அதற்கான கமிஷனை கொடுத்தனர். நகராட்சி தலைவர் கமிஷன் வாங்கும் விபரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டிஎஸ்பி ஜெயக்குமார், எஸ்ஐ சத்தியபிரியா, தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் நகராட்சி தலைவர் அலுவலகத்தை சோதனை செய்தனர். தலைவர் சிவகாமியிடம் கணக்கில் வராத மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷனாக பெற்ற 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றினர். தலைவர் மற்றும் துணைத் தலைவர் நாகராஜ், பணி மேற்பார்வையாளர் சிவபாக்கியம், ஒப்பந்ததாரர்கள் அபுதாகீர், சக்கீர், அலுவலக பணியாளர்கள் பிரபு மற்றும் சோமன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுகவை சேர்ந்த சிவகாமி, நெல்லியாலம் நகராட்சியின் முதல் பழங்குடியின பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது..