உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஹாரன் அடித்து காட்டு யானையை விரட்டிய லாரி டிரைவர் | Wild Elephant attack | Pandalur

ஹாரன் அடித்து காட்டு யானையை விரட்டிய லாரி டிரைவர் | Wild Elephant attack | Pandalur

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது கேரள மாநிலம் வயநாடு மாவட்டம். இங்குள்ள புல்பள்ளி பகுதியை சேர்ந்தவர் டெல்ஃபின். இவரது சகோதரர் கிறிஸ்டோபர். இருவரும் வயநாடு மாவட்டத்தில் இருந்து பாவலி சாலையில் மைசூருக்கு பைக்கில் சென்றனர். இப்பகுதியில் முத்தங்கா வன விலங்குகள் சரணாலயம் அமைந்திருப்பதால் சாலையோரங்களில் அதிக அளவில் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும். சகோதரர்கள் பைக்கில் செல்லும்போது ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று அவர்களின் பைக்கை தாக்கியது. அப்போது எதிரே வந்த லாரி டிரைவர் ஒருவர் ஹாரன் அடித்து யானையிடமிருந்து சகோதரர்களை காப்பாற்றினார். பின்னர் லாரியில் ஏறி இருவரும் உயிர் தப்பிய நிலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த டெல்ஃபின் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஒற்றை காட்டு யானையிடம் இருந்து இளைஞர்களை காப்பாற்றிய லாரி டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி