சுவாமி நடனம் கண்டு பக்தர்கள் பரவசம் Temple Festival
காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினம் ஸ்ரீஜடாயுபுரீஸ்வர சுவாமி தேவஸ்தானம் மாசிமகப் பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாள் விழாவில் ஸ்ரீ தியாகராஜர் வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக சன்னதியிலிருந்து புறப்பட்ட சுவாமி நடனம் ஆடியபடி ஆலய பிரகாரத்தை வலம் வந்து வசந்த மண்டபத்தை அடைந்தார்.
பிப் 20, 2024