ஜிப்மரில் முறைகேடு நடப்பதாக நோயாளிள் குற்றச்சாட்டு|Ambulance driven Security | Jipmer
புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் தினமும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவத்துறையில் எந்த ஒரு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தாலும் முதலில் அவை ஜிப்மரில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு தரமான சிகிச்சை எடுத்து செல்கின்றனர். இப்படி பெயர் பெற்ற ஜிப்மர் மருத்துவமனை சமீப காலமாக பல்வேறு முறைகேடுகள் சிக்கி தவிக்கிறது. தன்னாட்சி நிறுவனமாக தகுதி பெற்ற ஜிப்மர் மருத்துவமனை தற்போது நோயாளிகளை மருந்து மாத்திரைகள் உட்பட அனைத்தையும் வெளியில் வாங்கி வரச் சொல்லும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கு பணி புரியும் செக்யூரிட்டிகள் பாதுகாவலர் வேலை மட்டும் பார்க்காமல் நோயாளிகளுக்கு ரத்த டெஸ்ட் எடுப்பது, குளுக்கோஸ் போடுவது, நோயாளிகளுக்கு பணிவிடைகள் செய்வது உள்ளிட்ட பணகளை செய்கின்றனர்.