குவிந்து கிடக்கும் 2500 ஆண்டுக்கு முந்தைய பொக்கிஷங்கள்| ancient archaeological things exhibition
குவிந்து கிடக்கும் 2500 ஆண்டுக்கு முந்தைய பொக்கிஷங்கள் / ancient archaeological things exhibition /tourists interest /Puducherry உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தாகூர் அரசு கலைக் கல்லூரி மற்றும் மற்றும் அரசு அருங்காட்சியகம் சார்பில் தொல்லியல் பொருட்கள் கண்காட்சி புதுச்சேரி அருங்காட்சியக வளாகத்தில் நடந்து வருகிறது. தாகூர் கலைக் கல்லூரி தொல்லியல் ஆராய்ச்சியாளர் ரவிச்சந்திரன் தலைமையில் புதுச்சேரியில் சேகரிக்கப்பட்ட 2500 ஆண்டுக்கு முற்பட்ட பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. வரலாற்றுப் புகழ்பெற்ற அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. புதுச்சேரி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, பழமையான கடல் சங்கு, கிளிஞ்சல்கள், முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட தொல்லியல் பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற்றன. கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.