உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா | National Fossil Wood Park | swachhata special compaign

திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா | National Fossil Wood Park | swachhata special compaign

திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா | National Fossil Wood Park | swachhata special compaign | Tiruvakkarai | Puducherry புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான திருவக்கரை கிராமத்தில் தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இது இந்திய தொல்லியல் துறையால் சுற்றுலா தளமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்திய புவியியல் ஆய்வுத்துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பிரிவு சார்பில் பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருவுக்கரை தேசிய கல்மர பூங்காவில் சிறப்பு தூய்மைப்பணி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி கல்மர பூங்காவில் விழிப்புணர்வு நடை பயணமும் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !