பக்தர்கள் கூட்டு தியானம் | Aurobindo Ashram Mother's Birthday
புதுச்சேரியை அடுத்த ஆரோவில் சர்வதேச நகரை அமைத்த அன்னை மிரா அல்பாசா (mirra alfassa) பாரிசில் 1878ம் ஆண்டு பிப்ரவரி 21 ம் தேதி பிறந்தார். ஸ்ரீஅரவிந்தரின் ஆன்மிகக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1914ல் புதுச்சேரி வந்தார். அரவிந்தர் இவரை அம்மா என்ற பெயரிலேயே அழைத்தார். அன்னையின் பெரும் முயற்சியால் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமும், ஆரோவில் சர்வதேச நகரமும் தோற்றுவிக்கப்பட்டன. அன்னையின் 146 வது பிறந்த நாளையொட்டி இன்று ஆசிரமத்தில் அன்னை வசித்த அறை பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டது. பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
பிப் 21, 2024