உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / கார்ட்டூன் கதாபாத்திரத்தில் வந்து அசத்திய வீரர்கள் | aurovile equestrian comptetion

கார்ட்டூன் கதாபாத்திரத்தில் வந்து அசத்திய வீரர்கள் | aurovile equestrian comptetion

கார்ட்டூன் கதாபாத்திரத்தில் வந்து அசத்திய வீரர்கள் / aurovile equestrian comptetion/ tamil athletes won more medals புதுச்சேரி ஆரோவில் குதிரை ஏற்றப் பயிற்சி பள்ளி சார்பில் ஆண்டு தோறும் தேசிய அளவில் குதிரை ஏற்றப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 25 வது ஆண்டு போட்டி கடந்த 7 ம் தேதி முதல் துவங்கியது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஊட்டி உள்ளிட்ட நகரங்களில் இருந்து 100 குதிரைகள் மற்றும் 150 குதிரை ஏற்ற வீரர்கள் பங்கேற்றனர். காலை மற்றும் மாலையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தது. தடை தாண்டுதல், நடை பயிற்சி, அலங்கார நடை உள்ளிட்ட போட்டியில் தமிழகத்தின் கோவை மற்றும் மேல்மருவத்தூர் வீரர்கள் அதிக பதக்கங்களை தட்டிச் சென்றனர். போட்டியில் பங்கேற்ற இளம் வீரர்கள் கார்ட்டூன் கதாபாத்திரங்களான ஸ்பைடர் மேன், கவ்பாய் பேட்மேன் உள்ளிட்ட வேடத்தில் குதிரையில் அலங்கார நடை நிகழ்வில் பங்கேற்று பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ