உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / சட்டசபை நோக்கி காக்கிச்சட்டை ஊர்வலம் | auto workers strike in Puducherry

சட்டசபை நோக்கி காக்கிச்சட்டை ஊர்வலம் | auto workers strike in Puducherry

புதுச்சேரியில் நான்காயிரத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. வாடகை பைக் வருகைக்கு பின் ஆட்டோ தொழில் முடங்கி வருவதாக டிரைவர்கள் குமுறினர். வாடகை பைக்கை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் சமீபத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர். அவர், புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பர்மிட் இல்லாமல் ஓடுகிறது. டிரைவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என்றார். முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் சட்டசபை நோக்கி இன்று ஊர்வலம் சென்றனர். நல வாரியம், ஆன்லைன் கட்டணத்தை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சட்டசபை அருகே அவர்களை போலீசார் தடுத்தனர். அதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ