பெண்களுக்கான போட்டியில் போலீஸ் அணி அபாரம் | beach volley ball |TN beach volleyball team won|Nagai
பெண்களுக்கான போட்டியில் போலீஸ் அணி அபாரம் / beach volley ball /TN beach volleyball team won/Nagai நாகப்பட்டினம் கடற்கரையில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது. 4 நாட்கள் நடந்த இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 75 அணிகள் பங்கேற்றன.. இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு பீச் வாலிபால் அணியும், நாகை நம்பியார் நகர் அணியும் மோதியது . இதில் தமிழ்நாடு பீச் வாலிபால் அணி வெற்றி பெற்றது. பெண்களுக்கான போட்டியில் அக்கரைப்பேட்டை செந்தில்குமார் பீச் வாலிபால் அணியும், போலீஸ் ஆயுதப்படை அணியும் மோதியது. இதில் போலீஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு நாகை கலெக்டர் ஆகாஷ் பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.