சிலர் லஞ்சம் வாங்குவதாக சப் கலெக்டர் ஒப்புதல்| bribe| MLA Nehru allegation| Puducherry
புதுச்சேரியில் அரசியல்வாதிகள் முதல் அடிமட்ட அரசு ஊழியர்கள் வரை அனைவரும் லஞ்சம் வாங்குவதாக சுயேட்சை நேரு எம்எல்ஏ நேரு குற்றம் சாட்டினார். அவர் அரசுத்துறைகளில் கோரத்தாண்டவம் ஆடும் லஞ்சம், ஊழலை தடுக்க வலியுறுத்தி நேரு எம்எல்ஏ பொதுநல அமைப்புகளுடன் கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து சப் கலெக்டர் அர்ஜுன் ராமகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நேரு, இங்கு யாரும் லஞ்சம் வாங்கவில்லை என்று உங்களால் கூற முடியுமா என கேள்வி எழுப்பினார் அதற்கு சப் கலெக்டர் எல்லோரும் லஞ்சம் வாங்கவே செய்கின்றனர் என ஒப்புக்கொண்டார். சப் கலெக்டர் கூறுகையில், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்றார். எம்எல்ஏ நேரு கூறுகையில், புதுச்சேரியில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு தண்டனை கிடையாது ஆனால் அதை எடுத்து செல்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.