உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / சிசிடிவியில் பதிவான குழந்தை கடத்தல் ஆசாமி | | pondi

சிசிடிவியில் பதிவான குழந்தை கடத்தல் ஆசாமி | | pondi

புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி- - விஜயலட்சுமி தம்பதி. கடற்கரையில் பலுான் வியாபாரம் செய்கின்றனர். இவர்களது மூன்றரை வயது பெண் குழந்தை கடற்கரை காந்தி திடல் - நேரு சிலை எதிரே விளையாடிக் கொண்டிருந்தது. புதன் இரவு 7 மணிக்கு பின் குழந்தை மாயமானது. போலீஸ் உதவியுடன் விடிய விடிய தேடியும் பயனில்லை. அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். மர்ம ஆசாமி ஒருவன் குழந்தையை துாக்கிச் சென்று ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தது பதிவாகி இருந்தது. அதன் பின் குழந்தையுடன் ஆசாமி மாயமானான். குழந்தையை கடத்திய ஆசாமியை போலீசார் தேடுகின்றனர்.

பிப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை