4 கிராம விவசாயிகள் கோட்டாட்சியரிடம் மனு |compensation is not paid boycott the election
நாகை மாவட்டம், நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் இயங்குகிறது. எண்ணை ஆலை விரிவாகத்திற்காக பனங்குடி, முட்டம், கோபுராஜபுரம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 1700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடக்கிறது. இதனிடையே நிலம் வழங்கிய பனங்குடி, முட்டம், கோபுராஜபுரம், உத்தமசோழபுரத்தை சேர்ந்த நில உரிமையாளர்களுக்கு, நில எடுப்பு சட்டப்படி வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு தொகையும், நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காவில்லை. இதனால் வரும் பார்லிமென்ட் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி, இன்று விவசாயிகள் மற்றும் நில உரிமைதாரர்கள் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தலை புறக்கணிக்கும் மனுவினை, வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்தனர்.