உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பாக்கெட் சாராயத்தை அடுத்து பாக்கெட் பாலுக்கும் விடிவு காண முடிவு

பாக்கெட் சாராயத்தை அடுத்து பாக்கெட் பாலுக்கும் விடிவு காண முடிவு

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு நாளைக்கு சுமார் 25 ஆயிரம் லிட்டர் சாராயம் விற்பனையாகிறது சாராயத்தை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி கொடுப்பர் இதனால் தினசரி பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வாழ் விலங்குகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தியது புதுச்சேரியில் 50 மைக்ரான் அளவிற்கு குறைவான மற்றும் யூஸ் அன்ட் த்ரோ (use and throw ) பிளாஸ்டிக் கேரிபேக், ஸ்ட்ரா, ஸ்பூன் உள்ளிட்ட 15 பொருட்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்தது சாராய விற்பனை உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்து தர கோரிக்கை விடுத்தனர் பிளாஸ்டிக் கவர்களுக்கு மாறாக சோள தட்டையில் தயாரித்த பயோ பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மூன்று கிலோ எடை வரை தாங்கும் இந்த பயோ பேக் நான்கு நாட்களில் மட்கும் இதன் செயல்விளக்க கூட்டம் புதுச்சேரி லாஸ்பேட்டை கோளரங்கில் நடைபெற்றது கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சாராய கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பிளாஸ்டிக் பால் கவருக்கு மாற்றாக பயோ பேக்குகளை பயன்படுத்தும் முயற்சியில் புதுச்சேரி அரசு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை