அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் நிறுவனங்களில் சேர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை
அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் நிறுவனங்களில் சேர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை/ Increased cyber crime rates / Puducherry வேலையில்லா திண்டாட்டம் ஒரு பக்கம் தலை விரிச்சு ஆடுது. ஆனா அதே சமயம், டெய்லி 2000 முதல் 5000 ரூபா வர ஆன்லைன்ல சம்பாதிக்கலாம்னு போஸ்டர்ல ஆரம்பிச்சு whatsapp வர அப்டேட் வந்துகிட்டே இருக்கு. வீட்டுல இருந்தே ஃபுல் டைம், பார்ட் டைம் ஜாப் (full time , part time job ) பார்க்கலாம்னு கவர்ச்சிகரமா விளம்பரம் கொடுக்குறாங்க. அதை நம்பி, பல மக்கள் ஏமாந்து போறாங்க. அப்படி புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் ஆன்லைன்ல டைப்பிங் வேலைக்கு சேர்ந்திருக்காரு. வேலை குடுத்த கம்பெனி 11 மாசத்துக்கு ஒரு போலி ஒப்பந்தம் போட்டுருக்காங்க. வேலை செய்றதுக்காக ஒரு லிங்கையும் அனுப்பி இருக்காங்க. லிங்க்ல இருந்த வேலையை முடிச்ச மகேஷ், வேலைக்கான சம்பளத்தை கேட்டு இருக்காரு. ஆனா கம்பெனி தரப்புல மகேஷுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கு. குறிப்பிட்ட நேரத்துக்குள்ள வேலையை முடிக்காததால, ஒப்பந்தப்படி மகேஷ் மேல எஃப்.ஐ.ஆர் போட்டு இருக்குறதா சொல்லி மிரட்டி, 4,68,127 அபராதம் வாங்கி இருக்காங்க. ஒரு கட்டத்துல ஏமாந்தது தெரிஞ்சதும் ஷாக் ஆன மகேஷ், சைபர் போலீஸ்ல புகார் கொடுத்து இருக்காரு. சைபர் பிரிவு எஸ்.பி நித்யா ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு பணம் ட்ரான்ஸாக்ஷன் (transaction ) நடந்த அக்கவுண்டை டிராக்(track) பண்ணிருக்காங்க. மோசடியில ஈடுபட்டது மும்பை செம்பூர் பகுதியச் சேர்ந்த சிவப்பா மற்றும் போபடேனு உறுதியாயிருக்கு. ரெண்டு பேரும் சேர்ந்து , ஆன்லைன் வேலை கொடுக்குறோம்னு, அஞ்சு நாள்ல சுமார் ஒரு கோடியே 50 லட்சம் வரை ஏமாற்றி பணம் பரிச்சிருக்கிறத தெரிஞ்ச போலீசார் அதிர்ச்சியடஞ்சிருக்காங்க. மும்பையில இருந்த குற்றவாளிகள புதுச்சேரி போலீசார் சுற்றி வளைச்சு கைது பண்ணி சிறையில அடைச்சிருக்காங்க. நாளுக்கு நாள் புதுசு புதுசா ஆன்லைன் மோசடி பெருகிட்டே போகுது. வீட்டில் இருந்தே வேலை வாய்ப்பு, டிஜிட்டல் ஷேர் மார்க்கெட், ஆன்லைன் இன்வெஸ்ட்மென்ட், பாதிக்கு பாதி விலையில ஆஃபர் சேல்ஸ்னு மக்கள கொள்ளையடிக்கிற கூட்டம் வளந்துகிட்டே போகுது. பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம்னு போலீஸ் தரப்புல எச்சரிக்கை கொடுத்துட்டே இருக்காங்க. இந்த மாதிரி ஏதாவது மோசடி வேலை நடந்தா பொதுமக்கள் உடனே போலீசார் கவனத்துக்கு எடுத்துட்டு போகணும். கார்டு ( with vo) சைபர் புகார் கொடுக்க: இலவச டோல் ஃப்ரீ எண் - 1930 இமெயில்: cybercell-police@py.gov.in வெப்சைட்: www.cybercrime.gov.in போலீஸ் தரப்புல எவ்வளவு விழிப்புணர்வு கொடுத்தாலும் பொதுமக்கள் அதிக லாபத்துக்கு ஆசைப்படாம இருக்கிறது மட்டும்தான் சைபர் குற்றங்களை குறைக்கும்.