/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ வேட்டையன் துப்பாக்கி, பண மழை கொட்டும் பூ வானம் ரெடி | Diwali celebration | puducherry
வேட்டையன் துப்பாக்கி, பண மழை கொட்டும் பூ வானம் ரெடி | Diwali celebration | puducherry
தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்பு, கார வகைகள், விதவிதமான உணவுகள் இடம் பிடிக்கும். ஆனால் பட்டாசு இல்லாமல் தீபாவளி என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தாண்டு புதுச்சேரியில் 100 வகையான புத்தம் புதிய பட்டாசு ரகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. முற்றிலும் சிவகாசி தயாரிப்பு பட்டாசுகள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டுள்ளன. வேட்டையன் துப்பாக்கி, ஹெலிகப்டடர், பண மழை பெய்யும் பூ வானம், வண்ண வண்ண புகையை வெளியிடும் பட்டாசுகள் என புதுச்சேரி ரமணி பட்டாசுக்கடை உரிமையாளர் செந்தில் அசத்தியுள்ளார். இந்தாண்டு அதிகமான பட்டாசு ரகங்கள் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்ததுள்ளதால் வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் வந்து பட்டாசு ரகங்களை அள்ளி செல்கின்றனர்.
அக் 29, 2024