உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திமுக எம்எல்ஏவை கண்டித்து அதிமுக மாஜி எம்எல்ஏ தலைமையில் மறியல் | ADMK MLA Protest | DMK MLA

திமுக எம்எல்ஏவை கண்டித்து அதிமுக மாஜி எம்எல்ஏ தலைமையில் மறியல் | ADMK MLA Protest | DMK MLA

* திமுக எம்எல்ஏவை கண்டித்து அதிமுக மாஜி எம்எல்ஏ தலைமையில் மறியல் | ADMK MLA Protest | DMK MLA | Puducherry புதுச்சேரி முதலியார் பேட்டை எம்எல்ஏவாக இருப்பவர் திமுகவை சேர்ந்த சம்பத். 3 ஆண்டுகளாக தொகுதிக்கு எந்த வளர்ச்சி பணிகளையும் செய்து தரவில்லை என்று அதிமுக குற்றம் சாட்டியது. எம்எல்ஏவை கண்டித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் சாலை மறியல் செய்தனர். அவர்களிடம் போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 20 நாட்களுக்குள் ரோடு, குடிநீர் வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். மறியலால் கடலூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ