உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / 24 மணி நேரத்தில் 14 செமீ மழை கொட்டியது! புதுச்சேரி ரோடுகளில் வெள்ளம் | puducherry rain | karaikal

24 மணி நேரத்தில் 14 செமீ மழை கொட்டியது! புதுச்சேரி ரோடுகளில் வெள்ளம் | puducherry rain | karaikal

புதுச்சேரியில் நேற்று இரவு 8 மணிக்கு துவங்கிய கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. காலையிலும் மழை தொடர்ந்ததால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் காரைக்காலில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 12 செமீ, காரைக்காலில் 14 செமீ, மழை பதிவானது. புதுச்சேரியில் காலாப்பட்டு, லாஸ்பேட்டை, உப்பளம், தவளக்குப்பம், பாகூர், ஏம்பலம், திருக்கனூர், பத்துக்கண்ணு, காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, சேத்தூர், நெடுங்காடு, கீழகாசாகுடி, திருப்பட்டினம் உட்பட பல இடங்களில் மழை நீர் தேங்கியது. ரோடுகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்தது.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை