உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / விலை கிடைக்காமல் விவசாயிகள் வருத்தம் | Cotton price|farmers complain | farmers protest

விலை கிடைக்காமல் விவசாயிகள் வருத்தம் | Cotton price|farmers complain | farmers protest

கும்பகோணம் கொட்டையூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். 35 டன் பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏலத்தில் ஆந்திரா, தெலுங்கானா, தேனி, விருதுநகர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டு விலை நிர்ணயம் செய்தனர். கடந்த வார ஏலத்தில் பருத்தி குவிண்டால் 7,519 ரூபாய்க்கு விலை போனது. இந்த வாரம் குவிண்டால் வெறும் 5,500 ரூபாய்க்கு மட்டுமே வணிகர்கள் ஏலம் கேட்டனர். வணிகர்கள் சிண்டிகேட் அமைத்து அடிமாட்டு விலைக்கு பருத்தியை கேட்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தினர். பருத்தி குவின்டால் 9000 முதல் 10 ஆயிரம் வரை எடுத்தால் தான் எங்களுக்கு கட்டுபடியாகும். அதிகாரிகள் தலையிட்டு பருத்திக்கு உண்டான நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !