/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ பாண்டி மெரினாவை முற்றுகையிட்டு போராட்டம் | Fisherman protest against destroying mangrove forest
பாண்டி மெரினாவை முற்றுகையிட்டு போராட்டம் | Fisherman protest against destroying mangrove forest
புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் பகுதியில் பாண்டி மெரினா என்ற தனியார் கடற்கரை பூங்கா செயல்படுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பாண்டி மெரினா நிர்வாகத்தினர் இப்பகுதியில் உள்ள சதுப்பு நில காடுகள் மற்றும் மாங்குரோஸ் காடுகளை அழித்து வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். இங்குள்ள சொகுசு விடுதிகளில் தவறான செயல்கள் நடப்பதாக குற்றம் சாட்டினர். தனியார் கைக்கு தாரை வார்க்கப்பட்ட பாண்டி மெரினாவை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினாவின் மெயின்கேட்டை இழுத்து மூடி கோஷங்கள் எழுப்பினர். போலீசார் மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
செப் 12, 2024