சத்திய சோதனை புத்தகத்தை 25 ஆண்டுகளாய் இலவசமாய் வழங்கி சாதனை
சத்திய சோதனை புத்தகத்தை 25 ஆண்டுகளாய் இலவசமாய் வழங்கி சாதனை | distributed distributed Gandhis Satya sothanai book for students at free of cost புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் சம்பத்குமார் 56. இவர் அதே கல்லூரியில் படித்து அங்கேயே பணிபுரிகிறார். தன்னுடைய மாணவப் பருவத்தில் மாணவர்கள் வளர்ச்சி பெற பல்வேறு அமைப்புகளை நடத்தி மாணவர்களை நல்வழிப்படுத்தியவர் . வாசகர் வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி மாணவர்களை வாசிக்கும் பழக்கத்திற்கு ஊக்கப்படுத்தியவர். இந்த அமைப்பின் சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி மாணவர்களுக்கு காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தை இலவசமாக வழங்கி வாசிப்பு பழக்கத்தையும் காந்திய கொள்கைகளையும் ஊக்கப்படுத்தி வருகிறார். காந்தி ஜெயந்தி முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் மாணவர்களுக்கு காந்தி தொடர்பான வினாக்களை கேட்டு சத்திய சோதனை புத்தகத்தை இலவசமாக வழங்கினார். நிகழ்ச்சியில் திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மைய நிறுவனர் குறளரசி, சீதலா தேவி,மூத்த வழக்கறிஞர் பரிமளம், ஆல் இந்தியா புக் சாப்டர் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன், கலைவாணி மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காந்தி பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் தவறான பதில்களை கூறினர். சரியான பதில்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். பின்னர் வாசகர் வட்ட செயலாளர் பேராசிரியர் சம்பத்குமார் மாணவர்கள் அனைவருக்கும் காந்தியின் வரலாறு என்ற புத்தகத்தை இலவசமாக வழங்கி காந்தியின் கொள்கைகளை விளக்கிக் கூறினர். புத்தகத்தைப் பெற்ற மாணவர்கள் புத்தகத்தைப் படித்துப் பார்த்து அதன்படி நடப்போம் என தெரிவித்தனர். மாணவரின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த 25 ஆண்டுகளாக பேராசிரியர் சம்பத்குமார் இலவசமாக வழங்குவதை பெற்றோர் பலர் பாராட்டினர்.