ஆரோவில்லில் 25வது தேசிய குதிரை ஏற்ற போட்டி | Red Earth Riding School | Auroville | Horse riding
புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் உள்ள ரெட் எர்த் குதிரை ஏற்ற பயிற்சி பள்ளி சார்பில் 25ம் ஆண்டு தேசிய குதிரை ஏற்ற போட்டி இன்று துவங்கியது. மூன்று நாள் இந்த போட்டி நடக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை போட்டி நடக்கும். பெங்களூர், கோவை, சென்னை, ஆம்பூர், ஊட்டி, புதுச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 160 குதிரைகளும் 140 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முதலில் Dressage எனப்படும் கீழ்படிதல் பிரிவில் போட்டி நடந்தது. இதில் குதிரைக்கு வீரர் பயிற்சி அளிக்க வேண்டும்; தனது சொல்படி அதை நடக்க வைக்க வேண்டும். இந்த பிரிவின் முதல் சுற்றில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். குதிரைகளை தங்கள் கட்டளைக்கு ஏற்ப பணிய வைத்து அசத்தினர். இதையடுத்து ஜூனியர் தடை தாண்டும் போட்டி நடந்தது. இதில் சென்னை, ஊட்டி, பெங்களூரு குதிரை வீரர்கள் பங்கேற்று தடையை தாண்டினர். முதல் 3 இடம் பிடித்த வீரர்களுக்கு கடைசி நாள் பரிசு வழங்கப்படும்.