கலால் துறை துறையிடம் ஒப்படைத்த எம் எல் ஏ| illlicit liquor pocket bottle caught
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்த 58 பேர் இறந்தனர். இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத் தனது தொகுதியில் கள்ளச்சாராயம் விற்றால் தகவல் தர வேண்டும் என திமுக எம்எல்ஏ சம்பத் அறிவித்திருந்தார். வேல்ராம்பட்டு பகுதியில் பள்ளிக்கு எதிரே மளிகை கடையில் சாராயம் விற்பது போன்ற வீடியோ இன்று காலை போனில் வந்தது. அப்பகுதிக்கு சென்று எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது ஒரு வீட்டில் மூட்டையில் கள்ள சாராய பாக்கெட்டை கண்டுபிடித்தார். பள்ளிக்கு எதிரே மளிகை கடையில் கள்ளச்சாராய பாக்கெட் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்து கலால் துறைக்கு தகவல் தெரிவித்தார். கலால் துறை அதிகாரி மற்றும் போலீசார் அங்கு வந்து இருவரை கைது செய்து மளிகை கடை மற்றும் வீட்டில் இருந்த ரூ. ஐம்பதாயிரம் மதிப்புள்ள கள்ள சாராய பாக்கெட்டுகள்ஸ பறிமுதல் செய்தனர். சாராய விற்பனை குறித்து நடவடிக்கை எடுத்து யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும் என எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்