உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / இநு்து மக்கள் கட்சி அனுமன் சேனா தடாலடி | Marriage for lovers

இநு்து மக்கள் கட்சி அனுமன் சேனா தடாலடி | Marriage for lovers

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் இந்து மக்கள் கட்சியினர் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க தங்கத்தாலி, சீர்வரிசை மற்றும் மேளதாளத்துடன் ஜோடிகளை தேடினர். தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் கடலை போட்டுக் கொண்டிருந்த காதல் ஜோடிகள் இந்து மக்கள் கட்சியினர் வருவதை பார்த்ததும் டூவீலர்களில் ஏறி சிட்டாய் பறந்தனர். காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ஆசை, ஆசையாய் வந்த இந்து மக்கள் கட்சியினர் ஜோடிகளை காணாததால் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கோயிலுக்குள் காதல் ஜோடிகள் வராமல் தடுக்கும் வகையில் கோயில் நுழைவு வாயிலை பூட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

பிப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை