உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு | National cultural dance competition | Puducherry

மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு | National cultural dance competition | Puducherry

மத்திய அரசின் தேசிய கலாச்சார நடன போட்டி மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் நடைபெற்றது. இதில் 23 மாநிலங்களைச் சேர்ந்த 440 மாணவ மாணவியர் பங்கேற்றனர். கடும் போட்டிக்கு பின் புதுச்சேரி நடன குழுவினர் தேசிய அளவில் முதலிடம் பெற்றனர். தமிழர்களின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம், கரகாட்டம், சாட்டை ஆட்டம், பறை மற்றும் கேரள மாநிலத்தின் தையம் நடனங்களை ஆடி அசத்தினர். வெற்றி வாகை சூடி ஊர் திரும்பிய மாணவர்களுக்கு இன்று சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது தாரை தப்பட்டை முழங்க நடனமாடி வெற்றி கோப்பையை மாணவர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தேசிய கலாச்சார நடன போட்டியில் தென்னிந்திய மாணவர்கள் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி