தினமலர்- விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வித்யாரம்பம் | Vidyarambham | Dinamalar | Veveka
தினமலர்- விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வித்யாரம்பம் | Vidyarambham | Dinamalar | Vevekananda Vidyalaya School | Puducherry விஜயதசமி நாளான இன்று புதுச்சேரியில் கல்வியின் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார்கள் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள். தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய வித்யாரம்பம் நிகழ்ச்சி, லாஸ்பேட்டை விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் சரஸ்வதி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. கல்வியை தொடங்கும் இந்த சிறப்பான தருணத்தில் தினமலர் நாளிதழ் புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன் பங்கேற்று மழலையின் விரல் பிடித்து அ, ஆ எழுத வைத்து கல்விக் கண்ணை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதி செளந்தர்யா, ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிகண்டன், டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், டாக்டர் ஐயப்பன் மற்றும் செல்வகணபதி எம்பி., உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று குழந்தைகளின் விரலைப் பிடித்து நெல்மணிகளில் அ... ஆ... எழுத்துக்களை எழுத வைத்து, அவர்களின் கல்விப் பயணத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்க காலை முதலே ஏராளமான பெற்றோர்கள் ஆர்வத்துடன் பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். நிகழ்ச்சியில் தங்களது குழந்தைகளின் கல்வி துவக்க நிகழ்வில் உற்சாகமாகவும், ஆர்வத்துடனும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் ருசி பால் நிறுவனம் சார்பில் பலூன்கள், ஸ்கூல் பேக்ஸ் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய கிட் கிஃப்ட் (kid gift) வழங்கப்பட்டன.